9 மீனவர்கள் மாயமாகி 23 நாட்கள் ஆகிறது மீனவர்கள் பற்றி தகவல் கிடைக்காததால் உறவினர்கள் சாலை மறியல்
காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்கள் மாயமாகி 23 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மீனவர்கள் மாயம் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 3–ந் தேதி திருவொற்றியூர் கால
ராயபுரம்,
காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 9 மீனவர்கள் மாயமாகி 23 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் மாயம்சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 3–ந் தேதி திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரவிசெல்வன்(வயது 56) தலைமையில் காசிமேட்டை சேர்ந்த ராஜேந்திரன்(52), நிர்மல்(49), அந்தோணி(54), மாதவேல்(31), வினோத்(30), ராஜேஷ்(32), ஆந்திராவை சேர்ந்த மல்லிகார்ஜுனன்(31), வெங்கட்ரமணா(51) ஆகிய 9 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
சென்னையை 5–ந்தேதி வார்தா புயல் தாக்கியதால் அந்த மீனவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. கடந்த 12–ந் தேதி படகு டிரைவர் ரவிசெல்வன் செல்போனில் தாங்கள் கிழக்கு கடற்கரை பகுதியில் இருப்பதாக கூறியதும் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு மீனவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.
சாலைமறியல்மீனவர்கள் மாயமானது தொடர்பாக 16–ந் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசில் உறவினர்கள் புகார் செய்தனர். இதுபற்றி மீன்வளத்துறை அலுவலகத்திலும் புகார் செய்தனர். போலீசார் இந்திய கடலோர காவல்படையினர் உதவியுடன் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மீனவர்கள் மாயமாகி நேற்றுடன் 23 நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினரும், உறவினர்களும் அச்சம் அடைந்துள்ளனர். கோபம் அடைந்த மீனவர்களின் உறவினர்கள் காசிமேடு எண்ணூர் நெடுஞ்சாலையில் நேற்று மாலை திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய கடலோர காவல்படை உதவியுடன் காணாமல்போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மறியல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.