மு.க.ஸ்டாலின் தி.மு.க. செயல் தலைவராக தேர்வு செய்யப்படுவாரா? கனிமொழி எம்.பி. பதில்
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:– தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியதால் வீட்டில் இருக்கிறார். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். தமிழகத்தில் நடத்தப்பட்
ஆலந்தூர்,
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியதால் வீட்டில் இருக்கிறார். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.
தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் வருமானவரி சோதனைகள் குறித்து தி.மு.க.வின் கருத்துகளை மு.க.ஸ்டாலின் தெளிவாக கூறியுள்ளார். அதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். நிச்சயமாக அரசு பதில் அளிக்க கடமைப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டுக்காக 3–ந் தேதி தி.மு.க. சார்பில் போராட்டம் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் செயல் தலைவராக தேர்வு செய்யப்படுவாரா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி ‘‘மு.க.ஸ்டாலினே பொறுத்திருங்கள் என கூறியிருந்தார். எனவே பொதுக்குழு வரை பொறுத்திருங்கள். பொதுக்குழு நடத்தப்பட்ட பின்பு அதுபற்றி தெரியவரும்’’ என கூறினார்.