பல்லாவரம் நகராட்சியில் உள்ள பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.100 அபராதம் நகராட்சி ஆணையாளர் தகவல்
பல்லாவரம் நகராட்சியில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்:– பல்லாவரம் நகராட்சி பகுதியில் 29 வார்டுகளில் வசிக்கும் அனைத்து ம
தாம்பரம்,
பல்லாவரம் நகராட்சியில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்:–
பல்லாவரம் நகராட்சி பகுதியில் 29 வார்டுகளில் வசிக்கும் அனைத்து மக்களும் 100 சதவீதம் கழிப்பறைகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வார்டுகளில் உள்ளவர்கள் திறந்தவெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்துவதில்லை என பல்லாவரம் நகராட்சி அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பொதுமக்களிடம் உறுதிமொழி கடிதங்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த வார்டுகளில் திறந்தவெளியில் அசுத்தம் செய்பவர்கள் மீது ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பும் நகராட்சி சார்பில் விரைவில் வெளியிடப்படும். இதற்கு பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை நகராட்சிக்கு கடிதம் மற்றும் மின் அஞ்சல் மூலமாக 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.