குளச்சல் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு: குறும்பனை கடற்கரையில் மண்ணில் புதைந்து மீனவர்கள் போராட்டம்


குளச்சல் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு: குறும்பனை கடற்கரையில் மண்ணில் புதைந்து மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:45 AM IST (Updated: 27 Dec 2016 2:00 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை கடற்கரையில் மீனவர்கள் மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினர். மண்ணில் புதைந்து போராட்டம் குமரி மாவட்டம் இனயத்தில் (குளச்சல்) மத்திய அரசின் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதற்கான ஏற்பாடுகள்

குளச்சல்

குளச்சல் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை கடற்கரையில் மீனவர்கள் மண்ணில் புதைந்து போராட்டம் நடத்தினர்.

மண்ணில் புதைந்து போராட்டம்

குமரி மாவட்டம் இனயத்தில் (குளச்சல்) மத்திய அரசின் சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த வர்த்தக துறைமுகத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த பகுதியை சேர்ந்த கடற்கரை மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போன்ற பல கட்ட போராட்டங்கள் மீனவர்கள் சார்பிலும், பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று தெற்காசிய மீனவர் தோழமை சார்பில் மீனவர்கள் குறும்பனை கடற்கரையில் மீனவர்கள் மண்ணில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறியவர்கள் கழுத்து வரையிலும், பெரியவர்கள் இடுப்பு பகுதி வரையிலும் மண்ணில் புதைந்தபடி இருந்தனர். அப்போது துறைமுகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பரபரப்பு

இந்த போராட்டத்துக்கு அருட்பணி சர்ஜில் தலைமை தாங்கினார். போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், இனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு இயக்க தலைவர் ஜோர்தான், தி.மு.க. மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் வலம்புரிஜான், வக்கீல் பென்சாம், குமரி மாவட்ட மீனவர் பேரவை செயலாளர் கென்னடி, பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், காங்கிரஸ் ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜெஸ்டின், மார்த்தாண்டம் பாபு, குளச்சல் ஆன்றோ லெனின், குறும்பனை பெர்னார்டு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மண்ணில் புதைந்து மீனவர்கள் நடத்திய திடீர் போராட்டம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story