சுனாமியில் பலியான 419 பேர் அடக்கம் செய்யப்பட்ட காணிக்கை மாதா ஆலய வளாக நினைவு ஸ்தூபியில் மாலை அணிவித்து அஞ்சலி
குளச்சலில் கடந்த 2004–ம் ஆண்டு நடந்த சுனாமி பேரலையில், குளச்சல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் 419 பேர் பலியானார்கள். அவர்களை ஒரே இடத்தில் அதாவது காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் அடக்கம் செய்தனர். அங்கு நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டு உள்ளது. அங்கு
குளச்சல்,
குளச்சலில் கடந்த 2004–ம் ஆண்டு நடந்த சுனாமி பேரலையில், குளச்சல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் 419 பேர் பலியானார்கள். அவர்களை ஒரே இடத்தில் அதாவது காணிக்கை மாதா ஆலய வளாகத்தில் அடக்கம் செய்தனர். அங்கு நினைவு ஸ்தூபி எழுப்பப்பட்டு உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26–ந்தேதி மாலையில் உறவினர்கள் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். அதே போல் நேற்று மாலையில் சுனாமியில் பலியானவர்களின் நினைவு ஸ்தூபியில் உறவினர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக குளச்சல் காணிக்கை மாதா ஆலயத்தில் நினைவு திருப்பலி பங்கு தந்தை எட்வின் தலைமையில் நடந்தது. மேலும் அருட்பணியாளர்கள் கலந்து கொண்டு ஜெபம் செய்தனர்.
Next Story