திருச்சியில் பரபரப்பு துண்டு, துண்டாக வெட்டி சாக்கடையில் வீசப்பட்ட 1,000 ரூபாய் நோட்டுகள் போலீசார் விசாரணை
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் ஜெயந்தி பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாயில் நேற்று 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்தன. இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த நோட்டுகளை கூட்டமாக நின்று வேடிக்க
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் ஜெயந்தி பஸ் நிறுத்தம் அருகே சாக்கடை கால்வாயில் நேற்று 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்தன.
இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த நோட்டுகளை கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். ரூபாய் நோட்டில் உள்ள சீரியல் எண் தெரியாத அளவிற்கு வெட்டப்பட்டிருந்தது.
1,000 ரூபாய் நோட்டுகள் வெட்டி வீசப்பட்டு கிடப்பது குறித்து தகவல் அறிந்த உறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்த நோட்டுகளில் சிலவற்றை போலீசார் கைப்பற்றினர். சாக்கடை கால்வாயில் கிடந்ததால் பலவற்றை எடுக்கமுடியவில்லை. துண்டு, துண்டாக கிடந்த 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பை கணக்கிட முடியவில்லை. குவியலாக கிடந்ததாகவும், சிலவற்றை சாக்கடை தண்ணீரில் இழுத்து சென்றதாகவும் அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மொத்தம் 20–க்கும் மேற்பட்ட நோட்டுகளை வெட்டி வீசியிருக்கலாம் என போலீசார் கருதினர். அந்தநோட்டுகளை வெட்டி வீசியது யார்? என தெரியவில்லை. இதுகுறித்து உறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.