திருச்சியில் 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க மறுக்கும் வியாபாரிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு


திருச்சியில் 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்க மறுக்கும் வியாபாரிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் மனு
x
தினத்தந்தி 27 Dec 2016 5:15 AM IST (Updated: 27 Dec 2016 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் வியாபாரிகள் வாங்க மறுப்பதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் சமூக ஆர்வலர் புகார் மனு கொடுத்தார். 10 ரூபாய் நாணயங்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத

திருச்சியில் 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் வியாபாரிகள் வாங்க மறுப்பதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் சமூக ஆர்வலர் புகார் மனு கொடுத்தார்.

10 ரூபாய் நாணயங்கள்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பழனிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திருச்சி பொன்மலையை சேர்ந்த சமூக ஆர்வலர் சம்சுதீன் கொடுத்த மனுவில், ‘‘இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் இரு விதம் புழக்கத்தில் உள்ளது. இதில் ஒரு வித நாணயங்கள் செல்லாது எனக்கூறி பொதுமக்களிடம் இருந்து காந்திமார்க்கெட் மற்றும் மளிகைகடை உள்ளிட்ட கடைகளில் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்பதை வியாபாரிகளுக்கு கலெக்டர் அறிவிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை பெற்ற அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஜெயலலிதாவுக்கு சிலை

அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாவட்ட தலைவர் சுலைமான் கொடுத்த மனுவில், ‘‘திருச்சி மாநகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகள் சிலரை நாய்கள் கடித்து விடுகின்றன. வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே நாய்கள் தொல்லையை போக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

திருச்சி அ.தி.மு.க. நிர்வாகி ஒத்தக்கடை செந்தில் அளித்த மனுவில், கோர்ட்டு எம்.ஜி.ஆர்.சிலை அருகே முன்னாள் முதல்–அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் உருவ சிலையை அமைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். லால்குடி அருகே நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை. சாலை வசதி இல்லை. ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வினியோகிப்பதில்லை. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

வைகுண்ட ஏகாதசி விழா

நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சேகரன் கொடுத்த மனுவில்,‘ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவில் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கழிப்பிட வசதிகள் செய்து தர வேண்டும். மின் விளக்குகளை மின் ஆய்வாளர் மூலம் ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார். அரியமங்கலம் குவளக்குடி கீழ கலமலை, மேலகலமலை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி கோரியும், ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் மனு கொடுத்தனர். இதேபோல பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் பழனிசாமி அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.



Next Story