ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதி மக்கள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் ராஜவேலு தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கல்வீடு கட்ட நிதி உதவி புதுவை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிட மக்களுக்கு கல்வீடு கட்ட நிதி உ
புதுச்சேரி,
ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதி மக்கள் முன்னாள் அமைச்சர் ராஜவேலு தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கல்வீடு கட்ட நிதி உதவிபுதுவை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிட மக்களுக்கு கல்வீடு கட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஏம்பலம் மற்றும் நெட்டப்பாக்கம் தொகுதிகளை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் சிலருக்கு நிதியுதவி கொடுக்க மறுப்பதாகவும், ஆதிதிராவிடர் நலத்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜவேலு நேற்று காலை தலைமை செயலாளர் மனோஜ் பரிதாவை சந்தித்து முறையிட்டார். அப்போது ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதி மக்கள் உடன் சென்றனர். அப்போது தலைமை செயலாளர் அவர்களிடம், இது குறித்து விசாரணை நடத்தி முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முற்றுகை போராட்டம்பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர்கள் முன்னாள் அமைச்சர் ராஜவேலு தலைமையில் நேராக தட்டாஞ்சாவடியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு அவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது ஆதிதிராவிட நலத்துறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சமாதான பேச்சுவார்த்தைஇது பற்றிய தகவல் அறிந்த உடன் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர் ராஜவேலு½ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த மக்கள் சிலருக்கு காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நிதியுதவி கொடுக்க மறுப்பதாகவும் அவர்களுக்கு ஆதிதிராவிடர்நலத்துறை சார்பில் எந்த நலத்திட்ட உதவியும் வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
அப்போது, இயக்குநர் ரகுநாதன், விடுபட்டவர்களுக்கு அடுத்த மாதம் (ஜனவரி) 10–ந் தேதிக்குள் உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர்.