வங்கியில் பணம் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
வங்கியில் சரியான முறையில் பணம் வழங்கப்படாததை கண்டித்து கும்மிடிப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வங்கியில் பணம் இல்லை கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் பஜாரில் சிண்டிகேட் வங்கி உள்ளது. சுமார் 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 38 கிராமங்களைச்
கும்மிடிப்பூண்டி,
வங்கியில் சரியான முறையில் பணம் வழங்கப்படாததை கண்டித்து கும்மிடிப்பூண்டி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வங்கியில் பணம் இல்லைகும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் பஜாரில் சிண்டிகேட் வங்கி உள்ளது. சுமார் 10 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 38 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர்.
தற்போது இந்த வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு அரசு அறிவித்தபடி உரிய முறையில் பணம் வழங்குவது இல்லை என்றும், கடந்த 2 வாரங்களாக வங்கிக்கு பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது.
சாலை மறியல்இந்த நிலையில் நேற்று பென்ஷன் மற்றும் முதியோர் உதவித்தொகை பெற வங்கிக்கு நேரிடையாக வந்த முதியோர்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்காத வங்கி நிர்வாகம், அவர்களை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் நேற்று காலை வங்கி வாசலில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் உள்பட சுமார் 600 பேர், வங்கியில் சரியான முறையில் பணம் வழங்கப்படாததை கண்டித்து சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியல் செய்தனர்.
வீடுகளுக்கு சென்று பணம்இதுபற்றி தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கவேல் தலைமையிலான ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் சுடலைமணி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று வங்கி ஏஜெண்டு மூலம் பணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என வங்கி நிர்வாகத்தினர் கூறினர்.
அதை ஏற்று சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.