கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை திட்டம் விரைவில் அமல் மந்திரி எச்.கே.பட்டீல் பேட்டி
கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மந்திரி எச்.கே.பட்டீல் கூறினார். கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி எச்.கே.பட்டீல் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு அள
பெங்களூரு
கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மந்திரி எச்.கே.பட்டீல் கூறினார்.
கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி எச்.கே.பட்டீல் துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
அதிகாரிகள் மீது நடவடிக்கைஎனது துறையில் ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தினேன். இந்த ரொக்கம் இல்லாத பண பரிவர்த்தனை திட்டம் விரைவில் எனது துறையில் அமல்படுத்தப்படும். நிர்வாகத்தில் ஏற்படும் தாமதம், மோசடி போன்றவற்றை தடுக்கும் நோக்கத்தில் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்த துறையில் பாரபட்சத்தை நீக்குவது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது போன்றவற்றின் மூலம் ஒப்பந்ததாரர்கள், கூலித்தொழி£ளர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பது எங்களின் நோக்கம். கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான முறையில் கூலியை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்கள்துமகூரு மாவட்டத்தில் 814 பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 23 மையங்கள் சரியான முறையில் செயலாற்றவில்லை என்று என்னிடம் அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அந்த மையங்களை அமைத்து கொடுத்த நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்பும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலித்தொகையை 8 நாட்களில் வழங்க வேண்டும். ஒருவேளை 8 நாட்களுக்குள் கூலி வழங்க முடியாவிட்டால், 16 நாட்களுக்குள்ளாவது கூலியை வழங்க வேண்டும். இந்த காலத்திற்குள் கூலியை வழங்க தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்களிடையே விழிப்புணர்வுவேலை உறுதி திட்டத்தில் பணியாற்ற தொழிலாளர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும், இதற்கு கூலியை வழங்குவதில் ஏற்படும் தாமதமே காரணம் என்றும் சொல்கிறார்கள். இந்த திட்டம் பற்றியும், விரைவாக கூலி வழங்குவது பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.