புதிய போலீசார் நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை பரமேஸ்வர் பேட்டி
புதிய போலீசார் நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பரமேஸ்வர் கூறினார். பணி அழுத்தம் அதிகமானது பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் போலீசாருக்கு தங்கும் விருந்தினர் மாளிகை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் மந
பெங்களூரு,
புதிய போலீசார் நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பரமேஸ்வர் கூறினார்.
பணி அழுத்தம் அதிகமானதுபெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் போலீசாருக்கு தங்கும் விருந்தினர் மாளிகை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு அடிக்கலை திறந்து வைத்து பேசியதாவது:–
கர்நாடகத்தில் கடந்த 3½ ஆண்டுகளில் 19 ஆயிரத்து 600 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முந்தைய பா.ஜனதா ஆட்சியில் போலீஸ் துறையில் போலீசார் நியமனம் செய்யப்படாததால் 25 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதனால் போலீசாருக்கு பணி அழுத்தம் அதிகமானது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் போலீசார் நியமனத்திற்கு நிதித்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதன்படி காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.
கொலைகள் நடைபெறவில்லையா?சமுதாயத்தில் பல்வேறு காரணங்களுக்காக கொலை சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமானது. ஆனால் இந்த சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் கர்நாடக போலீஸ் முன்னணியில் உள்ளது. போலீஸ் துறையை இப்போது குமாரசாமி குறை சொல்கிறார். அதிக கொலைகள் நடப்பதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். அவர் முதல்–மந்திரியாக இருந்தபோது கொலைகள் நடைபெறவில்லையா?.
இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.
அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த பரமேஸ்வர், “புதிய போலீசார் நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஒருவேளை ஏதாவது முறைகேடு நடந்திருந்தால் அதற்கான ஆதாரத்தை குமாரசாமி வழங்க வேண்டும். முதல்–மந்திரியாக இருந்த குமாரசாமி பொறுப்புடன் பேச வேண்டும்“ என்றார்.