வழி தவறி கிராமத்துக்குள் புகுந்தது: புள்ளி மானை நாய்கள் கடித்து குதறின


வழி தவறி கிராமத்துக்குள் புகுந்தது: புள்ளி மானை நாய்கள் கடித்து குதறின
x
தினத்தந்தி 27 Dec 2016 3:00 AM IST (Updated: 27 Dec 2016 2:50 AM IST)
t-max-icont-min-icon

கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் தண்டரை ஊராட்சி புறஞ்சேரி கிராமத்தில் நேற்று காலை 6 மணியளவில் அழகிய புள்ளிமான் குட்டி ஒன்று வழி தவறி கிராமத்துக்குள் புகுந்தது. கிராம வீதியில் சுற்றித்திரிந்த மானை கண்ட நாய்கள், மான் குட்டியை விரட்டிச்சென்று கடித்து குதறி

கல்பாக்கம்,

கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் தண்டரை ஊராட்சி புறஞ்சேரி கிராமத்தில் நேற்று காலை 6 மணியளவில் அழகிய புள்ளிமான் குட்டி ஒன்று வழி தவறி கிராமத்துக்குள் புகுந்தது. கிராம வீதியில் சுற்றித்திரிந்த மானை கண்ட நாய்கள், மான் குட்டியை விரட்டிச்சென்று கடித்து குதறின. இதில் மானின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

இதை கண்ட அந்த பகுதி விவசாயி இஸ்மாயில் என்பவர் நாய்களை விரட்டி விட்டு அந்த மானை மீட்டார். பின்னர் காயம் அடைந்த மானுக்கு குடிநீர் மற்றும் தீவனம் வழங்கினார். இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கும், அணைக்கட்டு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சுமார் 1 வயது இருக்கும் அந்த புள்ளி மான் குட்டியை உடனடியாக வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் என்றார்.


Next Story