செய்யூர் அருகே வங்கி முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த சூனாம்பேடு பஜார் வீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக வங்கியில் பணம் எடுக்க சென்ற பொதுமக்களுக்கு வங்கியில் பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்றும் வங்
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த சூனாம்பேடு பஜார் வீதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக வங்கியில் பணம் எடுக்க சென்ற பொதுமக்களுக்கு வங்கியில் பணம் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்றும் வங்கியில் பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த 100–க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வங்கி முன் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூனாம்பேடு போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் பணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
Next Story