‘வார்தா’ புயலால் சேதம் அடைந்த வண்டலூர் பூங்காவை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு


‘வார்தா’ புயலால் சேதம் அடைந்த வண்டலூர் பூங்காவை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 2:50 AM IST)
t-max-icont-min-icon

‘வார்தா’ புயலால் சேதம் அடைந்த வண்டலூர் உயிரியல் பூங்காவை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. சீரமைக்கும் பணி தீவிரம் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1,480 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்

வண்டலூர்,

‘வார்தா’ புயலால் சேதம் அடைந்த வண்டலூர் உயிரியல் பூங்காவை சீரமைக்க முதல் கட்டமாக ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சீரமைக்கும் பணி தீவிரம்

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1,480 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இங்கு மொத்தம் 2,500 விலங்குகள் உள்ளன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரங்கள் இருக்கின்றன.

கடந்த 12–ந் தேதி ஏற்பட்ட ‘வார்தா’ புயலில் பூங்காவில் இருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள், விலங்குகள் இருப்பிடங்கள் மீதும், பார்வையாளர்கள் நடந்து செல்லும் சாலை பகுதிகளிலும் முறிந்து விழுந்தன. இதனால் வருகிற 28–ந் தேதி வரை பூங்காவில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் பூங்காவை வேகமாக சீரமைக்க போதிய நிதி இல்லாத காரணத்தால், சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் பூங்காவை விரைவாக சீரமைத்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து பூங்கா அதிகாரி கூறியதாவது:–

ரூ.1 கோடி ஒதுக்கீடு

வண்டலூர் பூங்கா ‘வார்தா’ புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு சேதம் அடைந்தது. இதனால் பூங்காவை சீரமைக்க அரசு, முதல் கட்டமாக ரூ.1 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. அந்த நிதியை கொண்டு தற்போது பூங்காவில் அனைத்து பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன.

வண்டலூர் உயிரியல் பூங்காவை மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பின்னர் பூங்காவை சீரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம்.

இவ்வாறு பூங்கா அதிகாரி கூறினார்.


Next Story