‘செல்பி’ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி விட்டு மனைவி கண் எதிரே தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை மனைவி கண் எதிரே பரிதாபம்


‘செல்பி’ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பி விட்டு மனைவி கண் எதிரே தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை மனைவி கண் எதிரே பரிதாபம்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:14 AM IST (Updated: 27 Dec 2016 3:14 AM IST)
t-max-icont-min-icon

‘செல்பி’ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு, மனைவி கண் எதிரே தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தனியார் நிறுவன ஊழியர் தானே மாவட்டம் வாஷிந்த் தாம்பே கிராமத்தை சேர்ந்தவர் விஷால்(வயது25). இவரது மனைவி வைஷ்ணவி(21). இந்த தம்

தானே,

‘செல்பி’ எடுத்து உறவினர்களுக்கு அனுப்பிவிட்டு, மனைவி கண் எதிரே தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

தனியார் நிறுவன ஊழியர்

தானே மாவட்டம் வாஷிந்த் தாம்பே கிராமத்தை சேர்ந்தவர் விஷால்(வயது25). இவரது மனைவி வைஷ்ணவி(21). இந்த தம்பதிக்கு துர்வா என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. விஷால் அசன்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று மாலை வீட்டிற்கு வந்து விஷால் தனது மனைவி வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு வாஷிந்த்– கடவலி ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

மனஉளைச்சல்

தண்டவாளம் அருகில் தனது மனைவியுடன் ‘செல்பி’ எடுத்த அவர், தன்னை சச்சின், அருண் ஆகிய 2 பேர் பலவழிகளில் தொல்லைப்படுத்தி வருவதால் தற்கொலை செய்துகொள்ள போவதாக ‘வாட்ஸ்–அப்’பில் உறவினர்களுக்கு தகவல் அனுப்பினார்.

மேலும் மனைவியிடம் குழந்தையை நல்லமுறையில் பார்த்து கொள்ளும்படி கூறினார். இதன் மூலம் கணவர் மிகுந்த மனஉளைச்சலில் இருப்பதை அறிந்த வைஷ்ணவி அவரை சமாதானப்படுத்தும் வகையில் பேசினார். அப்போது தண்டவாளத்தில் நீண்டதூர ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

அப்போது விஷால் மனைவி வைஷ்ணவியை தண்டவாளத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு, விட்டு வேகமாக வந்து கொண்டிருந்த ரெயில் முன் பாய்ந்தார். இதில் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண்முன்னேயே கணவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு வைஷ்ணவி கதறி அழுதார்.

தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் விஷாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வைஷ்ணவி ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். அதில், தனது கணவரை துன்புறுத்தி வந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story