கட்சி சின்னத்தில் மாற்றம் செய்து கொள்ள நவநிர்மாண் சேனாவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி


கட்சி சின்னத்தில் மாற்றம் செய்து கொள்ள நவநிர்மாண் சேனாவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
x
தினத்தந்தி 27 Dec 2016 3:17 AM IST (Updated: 27 Dec 2016 3:17 AM IST)
t-max-icont-min-icon

கட்சி சின்னத்தில் மாற்றம் செய்து கொள்ள நவநிர்மாண் சேனாவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. நவநிர்மாண் சேனா ராஜ்தாக்கரேவால் தொடங்கப்பட்ட கட்சி நவநிர்மாண் சேனா. இந்த கட்சியின் சின்னம் ரெயில் என்ஜின் ஆகும். ஆரம்பத்தில் இந்த ரெயில் என்ஜின் சின்னம்

மும்பை

கட்சி சின்னத்தில் மாற்றம் செய்து கொள்ள நவநிர்மாண் சேனாவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.

நவநிர்மாண் சேனா

ராஜ்தாக்கரேவால் தொடங்கப்பட்ட கட்சி நவநிர்மாண் சேனா. இந்த கட்சியின் சின்னம் ரெயில் என்ஜின் ஆகும். ஆரம்பத்தில் இந்த ரெயில் என்ஜின் சின்னம் வலது புறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்த சின்னத்துடன் கடந்த 2009–ம் ஆண்டு அக்கட்சி சட்டசபை தேர்தலை சந்தித்தது. அப்போது 13 இடங்களை கைப்பற்றி தாக்கத்தை உண்டாக்கியது. இதேபோல 2012–ம் ஆண்டு நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலின் போதும் நவநிர்மாண் சேனா 28 இடங்களில் வெற்றி கண்டது.

தோல்வி

இதன்பின்னர் கட்சியின் சின்னத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி ரெயில் என்ஜின் சின்னம் இடது புறத்தில் இருந்து வலது புறம் நோக்கி செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. சின்னத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றத்திற்கு பின் கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்த அக்கட்சி பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அக்கட்சியால் ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

மேலும் அக்கட்சியை சேர்ந்த மும்பை மாநகராட்சி கவுன்சிலர்கள் சிலர் பா.ஜனதா, சிவசேனாவில் இணைந்து தலைமைக்கு அதிர்ச்சி கொடுத்தனர். விரைவில் நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட நிலைமை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அக்கட்சி மிகுந்த அக்கறையுடன் உள்ளது.

தேர்தல் ஆணையம் அனுமதி

கட்சி சின்னத்தில் செய்யப்பட்ட மாற்றமே நவநிர்மாண் சேனா வீழ்ச்சிக்கு காரணம் என அக்கட்சி தலைவர்களால் நம்பப்படுகிறது. இதையடுத்து அண்மையில் நடந்த கட்சி கூட்டத்தில் மீண்டும் கட்சியின் ரெயில் சின்னத்தை வலது புறத்தில் இருந்து இடது புறம் நோக்கி செல்லும் வகையில் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு அனுமதி கேட்டு நவநிர்மாண் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியது. இதையடுத்து கட்சி சின்னத்தில் மாற்றம் செய்துகொள்ள நவநிர்மாண் சேனா கட்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து இருக்கிறது. கட்சி சின்னத்தில் செய்யப்படும் மாற்றத்தின் மூலம் மும்பை மாநகராட்சி தேர்தலில் நவநிர்மாண் சேனா தனது பலத்தை நிரூபிக்கும் என அக்கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.


Next Story