சாலையின் தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி–நண்பர் படுகாயம்


சாலையின் தடுப்புச்சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலி–நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:45 AM IST (Updated: 27 Dec 2016 3:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் சரண்ராஜ் (வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் நண்பரான திருச்சி மதுரை ரோடு கல்யாணசு

மலைக்கோட்டை,

திருச்சி அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மகன் சரண்ராஜ் (வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் நண்பரான திருச்சி மதுரை ரோடு கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்த சீனிவாசன் மகன் மவுலி (21) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து கடையில் இருந்து சரண்ராஜ், மவுலியை தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒயாமரி மேம்பாலத்தில் சென்ற போது சரண்ராஜின் கட்டுபாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ், மவுலியும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் சரண்ராஜ், மவுலியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரண்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மவுலிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story