போலீஸ்காரர் தாக்கியதில் அய்யப்ப பக்தரான சிறுவன் படுகாயம் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
திருச்சி பாலக்கரை கீழப்புதுரை சேர்ந்த சரவணனின் மகன் பிரசாத் (வயது 17). இவன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறான். கடந்த 24–ந்தேதி இரவு அதே பகுதியில் டீக்குடித்து விட்டு வந்த போது பொன்மலையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தடுத்து ந
திருச்சி பாலக்கரை கீழப்புதுரை சேர்ந்த சரவணனின் மகன் பிரசாத் (வயது 17). இவன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறான். கடந்த 24–ந்தேதி இரவு அதே பகுதியில் டீக்குடித்து விட்டு வந்த போது பொன்மலையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தடுத்து நிறுத்தி விசாரித்தார். அதன்பிறகு பிரசாத் அங்கிருந்து சென்ற போது, போலீஸ்காரர் லத்தியை சிறுவனின் காலில் வீசினாராம். இதில் கீழே விழுந்ததில் பிரசாத்திற்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பாலக்கரை தனியார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறான். இந்த நிலையில் லத்தியை வீசிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று புகார் மனு அளித்தனர். இது குறித்து பாலக்கரை போலீசாரை விசாரணை நடத்த போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி பாலக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.