எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து அஞ்சலி
பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். நினைவு தினம், மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்
பெரம்பலூரில் எம்.ஜி.ஆர். நினைவு தினம், மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரம்பலூர் புறநகர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அரணாரை ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர் மருதராஜா எம்.பி., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எம்.என்.ராசாராம், ஒன்றிய செயலாளர்கள் புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி, என்.கே.கர்ணன், சிவபிரகாசம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழகம் மற்றும் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story