கபடி போட்டியில் மாநில அளிவிலான போட்டிக்கு தகுதி பெற்ற செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூர் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கபாடி போட்டி தஞ்சாவூரில் உள்ள ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் பங்கேற்றனர். இதில் இறுதிப் போட்டியில் புதுக்கோட்ட
புதுக்கோட்டை,
தஞ்சாவூர் மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான கபாடி போட்டி தஞ்சாவூரில் உள்ள ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 22 அணிகள் பங்கேற்றனர். இதில் இறுதிப் போட்டியில் புதுக்கோட்டை செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி அணியும், தஞ்சாவூர் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரி அணியும் மோதியது. இதில் செந்தூரான் பாலிடெக்னிக் கல்லூரி அணி முதலிடத்தை வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும் தஞசாவூர் மண்டல அளவிலான கபாடி போட்டியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் செல்வராஜ் தலைமை தாங்கினார். கல்லூரியின் தலைவர் வயிரவன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவர் ஏ.வி.எம்.கார்த்திக் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.