விஸ்வநாததாஸ் நகர் பகுதியில் குடிநீர் வராததை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்ய முயற்சி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட, விஸ்வநாததாஸ் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல் செய்ய முயற்சித்த பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர். சாலைமறியல் முயற்சி புதுக்கோட்டை நகராட்சியில் 42–வார்டுகள் உள
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட, விஸ்வநாததாஸ் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல் செய்ய முயற்சித்த பெண்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர்.
சாலைமறியல் முயற்சி
புதுக்கோட்டை நகராட்சியில் 42–வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் அடிக்கடி குடிநீர் தட்டுபாடு ஏற்படும். மேலும் ஒரு சில இடங்களில் முழுமையாக குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிறமம் ஏற்படும். இது குறித்து பல முறை நகராட்சியை முற்றுகையிட்டும், சாலை மறியல் ஆர்ப்பாட்டம் என மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சியின் 3–வது வார்டில் உள்ள விஸ்வநாததாஸ் நகர் பகுதியில் தொடர்ந்து பல நாட்களாக குடிநீர் வராமல் மக்கள் அவதிப்பட்டுவந்தனர். இதானல் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுப தயாராக இருந்தனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த திருக்கோர்ணம் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் அந்த பகுதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதை தொடர்ந்து மக்கள் மறியல் செய்யாமல் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.