வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 140 பேர் கைது


வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 140 பேர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2016 4:16 AM IST (Updated: 27 Dec 2016 4:16 AM IST)
t-max-icont-min-icon

வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 140 பேரை போலீசார் செய்தனர். வறட்சி மாநிலமாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க

புதுக்கோட்டை,

வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உள்பட 140 பேரை போலீசார் செய்தனர்.

வறட்சி மாநிலமாக

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முற்றுகை போராட்டம்

அதன்படி புதுக்கோட்டையில் முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் கலெக்டர் அலுவலகம் முன்பு கூடினர். இதையடுத்து புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் உத்தரவின் படி கலெக்டர் அலுவலகம் முன்பு தடுப்புகட்டைகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

140 பேர் கைது

போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சோமையா முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராசு, விவசாய சங்கத்தின் கவுரவ தலைவர் சுந்தரராசன், பொருளாளர் காளிமுத்து, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் செயலாளர் அப்பாவுபாலண்டார் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 140 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் அனைவரும் புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். கைதானவர்களில் 24 பேர் பெண்கள் என்பது குறிப்பிடதக்கது.



Next Story