மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 27 Dec 2016 4:47 AM IST (Updated: 27 Dec 2016 4:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தின் மூலம் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 பேருக்கு ரூ.5 ல

நெல்லை

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கருணாகரன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தின் மூலம் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 7 பேருக்கு ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த வாரம் திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் கலெக்டரிடம் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்த சேரன்மாதேவி தாலுகாவை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்குவதற்கான உத்தரவினையும், மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் 4 பேருக்கு புதிய ரேஷன்கார்டுகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.கருணாகரன் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோடி, சேரன்மாதேவி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலக தாசில்தார் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story