ராதாபுரம் யூனியன் அலுவலகம் முற்றுகை
ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சிதம்பரபுரம் பஞ்சாயத்து வையகவுண்டம்பட்டியில் 700–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாத காலமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுத
ராதாபுரம்,
ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சிதம்பரபுரம் பஞ்சாயத்து வையகவுண்டம்பட்டியில் 700–க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு கடந்த 3 மாத காலமாக குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் நேற்று காலை காலி குடங்களுடன் ராதாபுரம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story