பருவமழை பொய்த்து விட்டதால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் நெல்லையில், எச்.ராஜா பேட்டி
பருவமழை பொய்த்து விட்டதால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார். இது குறித்து அவர் நெல்லையில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:– கருப்பு பணம் இந்தியாவில் கருப்பு பணத்தின் தாக்கத்தால்
நெல்லை
பருவமழை பொய்த்து விட்டதால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
இது குறித்து அவர் நெல்லையில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:–
கருப்பு பணம்இந்தியாவில் கருப்பு பணத்தின் தாக்கத்தால் நிதி கொள்கையை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அனைத்து அரசியல் கட்சியினரும் ஒப்புக்கொண்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊழலை ஒழிக்க வேண்டும். நிதி ஆதாரத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்றும், வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு உள்ளது. வங்கிகள் மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.
ஏழைகளிடம் வரவேற்புமோடியின் இந்த அறிவிப்பை ஏழை எளிய மக்களிடம் வரவேற்றுள்ளனர். ஆனால் ஒரு சில அரசியல் கட்சிகள் கேலியும், கிண்டல்களும் செய்து வருகிறார்கள். அவர்கள், வரம்பு மீறி பேசி, நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சில வங்கி அதிகாரிகளுடன் துணையுடன் தொழில் அதிபர்கள் பணத்தை மாற்றி இருக்கிறார்கள். சேகர் ரெட்டி, முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன்ராவ் ஆகியோருக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்தது எப்படி? இதுபற்றி விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தவறு செய்த வங்கி அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி.
வருகிற 3–ந் தேதி வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு யுத்தம் தொடங்கும் போது சில சிரமங்கள் இருக்கும். அதை நாம் சமாளிக்க வேண்டும். யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் இந்த சமயத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேசதுரோகம். எனவே வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட வேண்டும்.
ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று தான் மத்திய அரசு விரும்புகிறது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலையில் இருக்கும் போது எப்படி ஒரு எடுக்க முடியும். வழக்கு முடிந்த பிறகு மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும்.
தமிழகத்தில் பல மாவட்டங்கள் போதுமான அளவு மழை இல்லை. விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என மத்திய–மாநில அரசுக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நெல்லை மாவட்ட தலைவர் தயா சங்கர், விவசாய அணி மாநில பொது செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன். மாநில தொழில் நுட்ப செயலாளர் மகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.