நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 180 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் (2016) இதுவரை 180 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை,

வாலிபர் கைது
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் நம்பிகோவில் தெருவை சேர்ந்தவர் மாசானம் மகன் பெருமாள் (வயது27). இவர் மீது நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இவர் அந்த பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாக கூறப்படுகிறது.
இவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை கலெக்டர் கருணாகரன் ஏற்று பெருமாளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்பேரில் பெருமாள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதுவரை 180 பேர்
இது தொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் கூறுகையில், நெல்லை மாவட்டத்தில் குற்றங்களை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குற்ற செயல்களில் ஈடுபடுவோர் இந்த ஆண்டில் (2016) இதுவரை 180 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story