ராணுவத்தினர் போட்ட இரும்பு பாலத்திற்கு வயது 24 வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட முண்டந்துறை பாலம் கட்டப்படுவது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
24 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாபநாசம் முண்டந்துறை பாலம் கட்டப்படுவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
நெல்லை,

முண்டந்துறை பாலம்
தென்தமிழக மக்களுக்கு குடிநீர் வழங்கி வற்றாத ஜீவ நதியாகவும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் நதியாகவும் உள்ள தாமிரபரணி ஆறு உற்பத்தியாகிற இடம், பாபநாசத்திற்கு மேல் உள்ள பொதிகை மலையாகும். இந்த பொதிகைமலை அருகே தான் பாபநாசம் அணை உள்ளது. இதன் அருகில் பாணதீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், மின்சாரம் தயாரிக்கிற சேர்வலாறு அணை, முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகியவை உள்ளது.
இந்த இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டுமானால் பாபநாசத்தில் இருந்து மலைப்பாதையில் செல்லவேண்டும். இந்த மலைப்பாதையில் முண்டந்துறை என்ற இடத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டு இருந்தது. இந்த பாலமானது வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் 1938–ம் ஆண்டு கட்டப்பட்டது. பாபநாசம் அணை கட்டும்போது கட்டுமான பணிக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்காக இந்த பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாகத்தான் அரசு மற்றும் தனியார் பஸ்கள், சுற்றுலா பயணிகள் செல்லும் கார், வேன் போன்ற வாகனங்கள் சென்று வந்தன.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது
1938–ம் ஆண்டு முதல் 1992–ம் ஆண்டுவரையில் 54 ஆண்டுகள் இந்த பாலத்தில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 1992–ம் ஆண்டு பெய்த கன மழையினால் பாபநாசம் அணையில் இருந்தும், காட்டு பகுதியில் இருந்தும் அதிக அளவில் வெள்ளம் வந்தது. இந்த வெள்ளத்தில் மலை குன்றுகள், காட்டு மரத்தடிகள், பாறைகள் எல்லாம் அடித்து வரப்பட்டது.
இந்த வெள்ளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாததால் முண்டந்துறை ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் ஒரு மாத காலம் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
ராணுவத்தினர் போட்ட இரும்பு பாலம்
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தில் தற்காலிகமாக பாலம் அமைத்து கொடுத்தது. இதைத்தொடர்ந்து மீட்பு பணிக்கு வந்த இந்திய ராணுவத்தினர், மாவட்ட நிர்வாகம் அமைத்து கொடுத்த தற்காலிக பாலத்தின் மேலே ஒரு இரும்பு பாலத்தை அமைத்து கொடுத்தனர்.
கடந்த 24 ஆண்டுகளாக இந்த இரும்பு பாலத்தின் வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. மழை காலங்களில் இந்த இரும்பு பாலத்தை மூழ்கியடித்தபடி தண்ணீர் ஓடும். அந்த நேரத்தில் இந்த பாலத்தில் போக்குவரத்து தடைபடும்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பழைய பாலத்தின் தூண்கள், பீம்கள் எல்லாம் ஆற்றில் தற்போது உள்ள இரும்பு பாலத்தின் அருகில் கிடக்கிறது. 24 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்த அந்த பாலத்தின் தூண்கள், பீம்கள் அனைத்தும் தற்போதும் அப்படியே கிடக்கிறது. அந்த அளவிற்கு அது உறுதியாக இருந்து உள்ளது.
சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள்
குற்றாலம் வருகின்ற சுற்றுலா பயணிகள் அங்கு அருவிகளில் தண்ணீர் விழவில்லை என்றால் வருடத்தில் 365 நாட்களும் தண்ணீர் விழுகின்ற பாண தீர்த்த அருவியில் குளிக்கலாம் என்று எண்ணி பாபநாசம் அணைக்கு வருகிறார்கள். பாபநாசம் அணையில் இருந்து கசியும் தண்ணீரில் குளிக்கவும், சொரிமுத்து அய்யனார் கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
சொரிமுத்து அய்யானார் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் வரும். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இங்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த இரும்பு பாலத்தின் வழியாகவே சென்று வருகின்றன. தற்போது இந்த பாலத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை முன்பை விட பலமடங்கு அதிகரித்து விட்டது.
புதிய பாலம்
இதனால் இடிந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டித்தரவேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்பட பல தரப்பு மக்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கை சென்ற வண்ணம் உள்ளது. புதிதாக இந்த பாலம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை மற்றும் வனத்துறை ஆகியவை அனுமதி கொடுக்க வேண்டும். இதனால் கடந்த 24 வருடங்களாக இந்த பாலம் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2011–ம் ஆண்டு இங்கு புதிய பாலம் கட்டுவதற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 7½ மீட்டர் அகலத்திலும், 82 மீட்டர் நீளத்திலும், பழைய பாலம் இருந்த அதே இடத்தில் புதிய பாலம் கட்ட ரூ.2 கோடி திட்டம் தயாரித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த திட்ட அறிக்கையை அரசு ஏற்று புதிய பாலம் கட்ட ரூ.1 கோடியே 98 லட்சம் நிதி ஒதுக்கியது.
டெண்டர் எடுக்கவில்லை
இந்த பணிக்கு கடந்த 18–5–2011 அன்று டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை எடுக்க யாரும் முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து 23–5–2011 அன்று மறு டெண்டர் விடப்பட்டது. அதையும் யாரும் எடுக்காததால் பாலம் கட்டும் பணி இன்றுவரையில் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட நிதியானது போதுமானதாக இல்லை என்பதால் மீண்டும் மறுமதிப்பீடு தயாரித்து பாலம் கட்டுவதற்கு மட்டும் ரூ.5 கோடியே 50 லட்சமும், அதன் அருகில் சாலைகள் அமைக்க ரூ.1 கோடியே 50 லட்சமும் ஆக மொத்தம் ரூ. 7 கோடியில் திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிதியை அரசு ஒதுக்கீடு செய்து விட்டது.
ஆனாலும் இந்த பாலம் கட்டுவதற்கு யாரும் டெண்டர் எடுக்க முன்வராத நிலையில் தற்போது விடப்பட்ட டெண்டரில் ஒரு ஒப்பந்ததாரர் இந்த பணியை எடுத்து உள்ளார். பாலம் கட்டுமான பணி தொடங்கியதில் இருந்து பாலம் கட்டும் பணியை 8 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று டெண்டரில் உள்ள நிபந்தனையில் கூறப்பட்டு உள்ளது.
எனவே இனிமேலாவது உடனடியாக இங்கு புதிய பாலம் கட்டப்படுமா? என்பதுதான பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வனத்துறை அனுமதி கிடைத்தவுடன்
பாலம் கட்டுமான பணிகள் உடனடியாக தொடங்கும்
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் தகவல்
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ஒருவர் கூறுகையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாபநாசம் முண்டந்துறை பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்ட பலமுறை முயற்சி எடுத்தும் நடக்கவில்லை. வனத்துறை, மின்சாரத்துறை என பல்வேறு துறைகள் அனுமதி அளிக்க வேண்டும். இதையும் தாண்டி அது புலிகள் சரணாலய பகுதியாக இருப்பதால் அங்கு மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கக்கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றம் வனப்பகுதியில் புதிதாக பாலம், கட்டிடம் கட்டக்கூடாது என்று அறிவித்து உள்ளது. இருந்தாலும் இது பழைய பாலம் என்பதால் இந்த பாலத்தை கட்டுவதில் பிரச்சினை இல்லை.
இந்த பாலத்தை கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதைத்தொடர்ந்து பாலம் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. பாலம் கட்டும் பணிக்கு வனத்துறையினர் அனுமதிக்காக காத்து உள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பாலம் கட்டும் பணி தொடங்கும். புதிய பாலம் கட்டப்பட்ட பின்னர் பாபநாசம் அணைக்கும், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும், சேர்வலாறு அணைக்கும் சுற்றுலா பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் வாகனங்களில் சென்று வரலாம்.

Next Story