இஞ்சிமேடு பெரியமலை திருமணிச்சேறைவுடையர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலையில் உள்ள திருமணிச்சேறைவுடையர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு திருமணிச்சேறைவுடையருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகார நந்திக்கு சிவாச்சாரியர் ஆனந்தன்
சேத்துப்பட்டு,
பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு பெரியமலையில் உள்ள திருமணிச்சேறைவுடையர் கோவிலில் பிரதோஷத்தை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு திருமணிச்சேறைவுடையருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து அதிகார நந்திக்கு சிவாச்சாரியர் ஆனந்தன் பால், தயிர், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, அருகம்புல், மலர்களால் அலங்காரம் செய்தார். பின்னர் திருமணிச்சேறைவுடையர், திருமணிநாயகி தாயார், அதிகார நந்திக்கு தீபாராதனை நடந்தது. சிவயோகி சித்தர் பெருமாள்சாமி பக்தி பாடல்கள் பாடினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story