கண்ணமங்கலம் அருகே வாகனம் மோதி போலீஸ்காரர் பலி


கண்ணமங்கலம் அருகே வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 28 Dec 2016 4:30 AM IST (Updated: 27 Dec 2016 6:34 PM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸ்காரர் பலி கண்ணமங்கலத்தை அடுத்த கீழ்நகர் அருகே உள்ள குருமாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் தேவராஜன் (வயது 27). வேலூர் ஆயுதப்படை போல

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ்காரர் பலி

கண்ணமங்கலத்தை அடுத்த கீழ்நகர் அருகே உள்ள குருமாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் தேவராஜன் (வயது 27). வேலூர் ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் தேவராஜன் வீட்டில் இருந்து வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

வேலூர் – ஆரணி மெயின் சாலை அம்மாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் தேவராஜன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட தேவராஜன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிசுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேவராஜன் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். பின்னர் போலீசார் தேவராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் சுந்தர்ராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.


Next Story