சிவகங்கை நகரில் கருவேல மரங்களை வருகிற 3–ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் கலெக்டர் மலர்விழி அறிவிப்பு
சிவகங்கை நகரில் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை வருகிற 3–ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். சிவகங்கை நகர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அரசு மற்றும் தனியா
சிவகங்கை,
சிவகங்கை நகரில் தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை வருகிற 3–ந்தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நகர்சிவகங்கை மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உள்ள கருவேல மரங்களை வருகிற 10–ந்தேதிக்குள் முற்றிலுமாக தூருடன் அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள கருவேல மரங்களை தூருடன் அகற்ற தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சிவகங்கை நகரில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பொருட்டு சம்பந்தப்பட்ட பட்டாதாரர்கள் தாங்களாகவே தங்களுக்கு உரிமைப்பட்ட நிலத்தில் இருக்கும் கருவேல மரங்களை வருகிற 3–ந்தேதிக்குள் அகற்றிக்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
3–ந்தேதிக்குள்மேலும் பட்டாதாரர்கள் தாங்களாக முன்வந்து கருவேல மரங்களை தூருடன் அகற்றி கொள்ளாத பட்சத்தில், பட்டா நிலங்களில் உள்ள கருவேல மரங்கள் ஐகோர்ட்டு உத்தரவின்படி, அரசின் சார்பில் அகற்றப்பட்டு, மேற்படி மரங்களை அகற்றுவதற்கு ஆகும் செலவினம் சம்பந்தப்பட்ட பட்டாதாரர்களிடமிருந்து வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்களின் நன்மை மற்றும் வருங்கால சந்ததிகளின் நலன் கருதி பட்டாதாரர்கள் தங்களுக்கு உரிமைப்பட்ட நிலத்தில் இருக்கும் கருவேல மரங்களை தாங்களாகவே வருகிற 3–ந்தேதிக்குள் தூருடன் அகற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சிங்கம்புணரி பேரூராட்சிஇதேபோல் சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் நிலங்களில் உள்ள கருவேல மரங்களை வருகிற 31–ந்தேதிக்குள் அகற்றிக் கொள்ள வேண்டும். இதுகுறித்து சிங்கம்புணரி செயல் அலுவலர் முனியாண்டி கூறியதாவது:–
சிங்கம்புணரி பேரூராட்சி பகுதி மிகவும் வறண்ட பகுதியாக மாறி வருகிறது. இங்கு பருவமழை சரிவர பெய்யாததால் கண்மாய்கள் வறண்டுவிட்ட நிலையில் நீலத்தடி நீரை உறிஞ்சும் கருவேல மரங்கள் அதிகஅளவில் உள்ளது. எனவே ஐகோர்ட்டு உத்தரவுப்படி, தனியாருக்கு சொந்தமான நிலங்கள், வயல்வெளிகளில் உள்ள கருவேல மரங்களை தாங்களாக முன் வந்து வருகறி 31–ந்தேதிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும். பேருராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் 31–ந்தேதிக்குள் கருவேல மரங்களை அகற்ற தவறினால், வருகிற 1–ந்தேதிக்கு பிறகு பேரூராட்சி சார்பில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு அதற்குரிய செலவு தொகையுடன் அபராதமாக ரூ.1000 சேர்த்து வசூலிக்கப்படும். இதில் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிங்கம்புணரி பேரூராட்சி வளர்ச்சிக்கு ஆர்வம் கொண்டு தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்பினர் பொது இடங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.