நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு 3 படகுகள் சேதம்


நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு 3 படகுகள் சேதம்
x
தினத்தந்தி 28 Dec 2016 4:00 AM IST (Updated: 27 Dec 2016 6:41 PM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் 3 படகுகள் சேதம் அடைந்தன. ராமேசுவரம் மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது அவ்வப்போது நடந்

ராமேசுவரம்,

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் 3 படகுகள் சேதம் அடைந்தன.

ராமேசுவரம் மீனவர்கள்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசும், மத்திய அரசை அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து 500 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துகொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் இருந்து செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக தங்களது வலைகளை எடுத்தனர்.

படகுகள் சேதம்

அதற்குள் இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பல் மூலம் ராமேசுவரம் மீனவர்களின் படகுகள் மீது மோதினர். இதில் 3 படகுகள் சேதம் அடைந்தன. மேலும் ராமேசுவரம் மீனவர்களின் படகில் ஏறிய இலங்கை கடற்படையினர் வலைகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் வீசினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியில் நிறுத்தி விட்டு அங்கிருந்து கரைக்கு திரும்பினர். இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட 51 மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில் இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது மீனவர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story