மாநில அளவிலான தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி தொழில் மையத்தில் நடந்தது


மாநில அளவிலான தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரி தொழில் மையத்தில் நடந்தது
x
தினத்தந்தி 28 Dec 2016 4:15 AM IST (Updated: 27 Dec 2016 6:52 PM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது. விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம், தலித் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்டு இண்டஸ்ட்ரீஸ் அமைப்பு (டி.ஐ.சி.ச

தர்மபுரி,

மாநில அளவிலான தொழில்முனைவோர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தில் நடந்தது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனம், தலித் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்டு இண்டஸ்ட்ரீஸ் அமைப்பு (டி.ஐ.சி.சி.ஐ) ஆகியவை இணைந்து நடத்திய எஸ்.சி., எஸ்.டி. தொழில்முனைவோருக்கான மாநில அளவிலான தொழில் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தில் நேற்று நடைபெற்றது. சிறு, குறு, நடுத்தர தொழில்மேம்பாட்டு நிறுவன ஆலோசகர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் திருப்பதி வரவேற்றார். நிகழ்ச்சியில் டி.ஐ.சி.சி.ஐ. அமைப்பின் மாநில தலைவர் லெனின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

மத்திய அரசின் ஸ்டேண்ட்அப் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் வங்கி கிளைகளிலும், ஒரு எஸ்.சி., எஸ்.டி. தொழில் முனைவோர் மற்றும் ஒரு பெண் தொழில்முனைவோருக்கு கட்டாயமாக தொழில்முனைவு கடனுதவி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரை வங்கிகள் கடனுதவி வழங்கும்.

4 சதவீத ஒதுக்கீடு

இந்த கடன் தொகைக்கான உத்தரவாதத்தை மத்திய அரசு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வழங்கும். இதேபோல் எஸ்.சி., எஸ்.டி, தொழில்முனைவோருக்கு பொதுத்துறை நிறுவனங்களுக்கான பொருட்களை தயாரித்து அளிப்பதில் 4 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில்முனைவோருக்கு தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் முருகன், மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார், சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவி இயக்குனர் திருப்பதி, பெல் நிறுவன அதிகாரி செந்தில்முருகன், என்.எஸ்.ஐ.சி. அதிகாரி செந்தில்குமார், மேட்டூர் அனல் மின்நிலைய அதிகாரி ராம்குமார், வங்கி அதிகாரி சுப்பிரமணி, மத்திய கயிறு வாரிய அதிகாரி பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்முனைவோருக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கி பேசினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி.ஐ.சி.சி.ஐ. நிர்வாகிகள் தினேஷ்சங்கர், தமிழழகன், திருமுருகன் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.


Next Story