மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு
டியூசன் சென்ற மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் ந
தர்மபுரி,
டியூசன் சென்ற மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகள், கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்களில் கல்விக்கடன், தொழில்கடன், இலவச வீட்டுமனை உள்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராசன் மற்றும் நிர்வாகிகள் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்தில் கொண்டு கரும்பு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், இதர விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். பாலக்கோட்டில் மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக டியூசன் ஆசிரியர் உள்பட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
ரூ.10 லட்சம் இழப்பீடுநீலகிரி மாவட்டம் குன்னூரில் மண் சரிவினால் உயிரிழந்த அரூரை சேர்ந்த 4 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டிருந்தன. பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் விவேகானந்தன் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.