நெல்லையில் வங்கி, ஏ.டி.எம். மையங்களில் குவிந்த பொதுமக்கள்
நெல்லையில் வங்கி, ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர். 500, 1000 ரூபாய் நோட்டுகள் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி மத்திய அரசு அறிவித்ததால் வங்கிகளில் பணத்தை மாற்றுவதற்கு பல நாட்களாக மக்கள் சிரமப்பட்டு வ
நெல்லை,
நெல்லையில் வங்கி, ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள்500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி மத்திய அரசு அறிவித்ததால் வங்கிகளில் பணத்தை மாற்றுவதற்கு பல நாட்களாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். தினமும் வங்கிகள், ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து வந்தது.
இந்த நிலையில் புத்தாண்டையொட்டி பொருட்கள் வாங்குவதற்கு மக்களிடம் பணத்தட்டுபாடு அதிக அளவில் உள்ளதால், வழக்கம் போல் நேற்றும் நெல்லை ஸ்ரீபுரம் ஸ்டேட் வங்கி வளாகத்தில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பணத்தை பெற்றுச்சென்றார்கள்.
நெல்லை சந்திப்பில் உள்ள இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஸ்ரீபுரம் ஸ்டேட் வங்கி ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் காசோலை, பணம் எடுக்கும் சிலிப் ஆகியவற்றை நிரப்பி கொடுத்து ரூ.24 ஆயிரம் வரை எடுத்து சென்றனர். இதே போல் நெல்லையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை பெற்றுச்சென்றார்கள்.
ஏ.டி.எம். மையம்இதேபோல் ஏ.டி.எம். மையங்களிலும் கூட்டம் அலைமோதியது. வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்தார்கள். ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு நேற்று ரூ.2 ஆயிரத்து 500 மட்டுமே எடுக்க முடிந்தது. மதியத்திற்குள் பல ஏ.டி.எம். மையங்களில் இருந்த பணம் தீர்ந்து போனது. இதனால் பொது மக்கள் பணம் எடுக்க முடியாமல் திரும்பிச் சென்றார்கள். நெல்லை மாநகரத்தில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் மூடியே கிடந்தன.