காவேரிப்பட்டணம் அருகே பஸ் மீது லாரி மோதி 10 பேர் படுகாயம்


காவேரிப்பட்டணம் அருகே பஸ் மீது லாரி மோதி 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Dec 2016 4:30 AM IST (Updated: 27 Dec 2016 8:11 PM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ் மீது லாரி மோதியது தர்மபுரியில் இருந்து திருப்பதிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை பர்கூரைச் சேர்ந்த பிரான்சிஸ் (வயது 51) என்பவர் ஓட்டிச்

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ் மீது லாரி மோதியது

தர்மபுரியில் இருந்து திருப்பதிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை பர்கூரைச் சேர்ந்த பிரான்சிஸ் (வயது 51) என்பவர் ஓட்டிச் சென்றார். கண்டக்டராக கிருஷ்ணகிரி பாலாஜி நகரைச் சேர்ந்த அலெக்ஸ் (35) என்பவர் இருந்தார். அந்த பஸ்சில் மொத்தம் 30 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த பஸ் காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி மாட்டு தீவனம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக பஸ் மீது மோதியது.

10 பேர் படுகாயம்

இந்த விபத்தில் அரசு பஸ் சாலையோரம் ஆட்கள் இன்றி நின்று கொண்டிருந்த கார் மீது ஏறி அந்த பகுதியில் உள்ள 6 அடி பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் பிரான்சிஸ், கண்டக்டர் அலெக்ஸ், பஸ்சில் பயணம் செய்த பாலக்கோடு லம்மாண்டஅள்ளியைச் சேர்ந்த புஜ்ஜப்பன் (35), கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்த முத்துலட்சுமி, சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த லட்சுமி (29), பர்கூரைச் சேர்ந்த அசோகன் (45), தமிழ்ச்செல்வி (31), கிஷோர், கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த ரேவதி (31), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சின்னசாமி (45) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

லாரி டிரைவரான வேலூர் சுப்பிரமணிய தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (27) லேசான காயங்களுடன் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story