கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2016 4:00 AM IST (Updated: 27 Dec 2016 8:12 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எ

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத், திருமால், முனுசாமி, பி.முனுசாமி, மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் கண்ணு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணப்பா, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் செல்லகுமார், பர்கூர் ஒன்றிய தலைவர் தேவராஜ், நிர்வாகிகள் மாதேஸ்வரன், அன்பு, பவுன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இதில் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களாக அறிவித்து அவசியமான நிவாரண திட்டங்களை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும். விவசாய பாதிப்பால் அதிர்ச்சியடைந்து தற்கொலை செய்து கொண்டு இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story