இன்று நடக்கிறது: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் வித்யாசாகர்ராவ் கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் கவர்னர் வித்யாசாகர்ராவ் கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
நெல்லை,

பட்டமளிப்பு விழா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 24–வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ.சி. கலையரங்கத்தில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது. தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் தலைமை தாங்கி, மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். பல்கலைக்கழக இணைவேந்தரும், கல்வி அமைச்சருமான கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றுகிறார்.
புதுடெல்லியில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகத்தின் தகைசால் பேராசிரியரும், என்.பி.எல். அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குனருமான விக்ரம்குமார் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். இந்த விழாவில் துணை வேந்தர் பாஸ்கர், பதிவாளர் ஜான் டி பிரிட்டோ உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தமிழக கவர்னர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கருணாகரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல், உதவி கலெக்டர் பெர்மி வித்யா, மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் இளங்கோ, உதவி போலீஸ் கமிஷனர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story