தூத்துக்குடி கல்லூரியில் மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கருத்தரங்கம்


தூத்துக்குடி கல்லூரியில் மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கருத்தரங்கம்
x
தினத்தந்தி 28 Dec 2016 2:00 AM IST (Updated: 27 Dec 2016 8:18 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் தேவராஜ் வரவேற்று பேசினார். பாண்டியன் கிராம வங்கி மண்டல மேலா

தூத்துக்குடி,

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மின்னணு பண பரிவர்த்தனை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் தேவராஜ் வரவேற்று பேசினார். பாண்டியன் கிராம வங்கி மண்டல மேலாளர் சுப்பையா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். உதவி மேலாளர் நிலாவதி மின்னணு பண பரிவர்த்தனை குறித்து விளக்கி பேசினார். கருத்தரங்கில் திட்ட அலுவலர் பெரியசாமி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர் பொன்னுத்தாய் நன்றி கூறினார்.


Next Story