கயத்தாறு அருகே கிணற்றில் விழுந்து 2 புள்ளிமான்கள் சாவு


கயத்தாறு அருகே கிணற்றில் விழுந்து 2 புள்ளிமான்கள் சாவு
x
தினத்தந்தி 28 Dec 2016 1:30 AM IST (Updated: 27 Dec 2016 8:52 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே, தண்ணீர் தேடிச்சென்ற 2 புள்ளி மான்கள் கிணற்றில் தவறி விழுந்து இறந்து போயின. கிணற்றுக்குள் விழுந்து... நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு, கோவில்பட்டி குருமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெளிமான்கள், புள்ளி மான

கயத்தாறு,

கயத்தாறு அருகே, தண்ணீர் தேடிச்சென்ற 2 புள்ளி மான்கள் கிணற்றில் தவறி விழுந்து இறந்து போயின.

கிணற்றுக்குள் விழுந்து...

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு, கோவில்பட்டி குருமலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெளிமான்கள், புள்ளி மான்கள், மிளா உள்ளிட்ட அரியவகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால், வனப்பகுதிகளில் உள்ள குளம், குட்டைகள் தண்ணீரின்றி வறண்டன. இதனால் தண்ணீரைத் தேடி, வனவிலங்குகள் மலையடிவார பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்கின்றன. அப்போது வாகனங்கள் மோதியும், தெருநாய்களிடம் சிக்கியும், கிணற்றுக்குள் தவறி விழுந்தும் வனவிலங்குள் உயிரிழக்க நேரிடுகின்றன.

தவறி விழுந்த மான்

நேற்று முன்தினம் கயத்தாறு அருகே நாகலாபுரத்தில் தண்ணீரைத் தேடி, ஒரு வயதுடைய புள்ளி மான் வந்துள்ளது. அந்த மான் அப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி வனத்துறையினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி, மானின் உடலை மீட்டனர். அதனை கயத்தாறு கால்நடை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

மேலும் ஒரு மான் சாவு

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் கயத்தாறு அருகே அய்யனாரூத்து கிராமத்தில் சப்பார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தண்ணீரைத் தேடி, 3 வயதுடைய புள்ளிமான் ஒன்று வந்தது. அந்த மான் தோட்டத்தில் உள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி வனத்துறையினர் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி, இறந்த மானின் உடலை மீட்டனர். அதனை கயத்தாறு கால்நடை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.

கயத்தாறு அருகே அடுத்தடுத்த 2 நாட்களில் 2 புள்ளிமான்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்து உள்ளது. வனப்பகுதியில் போதிய தண்ணீர் தொட்டிகள் அமைத்து, வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story