தூத்துக்குடியில் பரபரப்பு போலீஸ் ஏட்டுவிடம் வாக்கி–டாக்கி பறிப்பு தொழிலாளி கைது; மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் போலீஸ் ஏட்டுவிடம் வாக்கி–டாக்கியை பறித்து சென்ற தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி,

போலீஸ் வாக்கி–டாக்கி பறிப்பு
தூத்துக்குடி தாளமுத்துநகரில் உள்ள தந்தை பெரியார் நகரில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் 2 பேர் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் ஏட்டு பழனி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அவர் ரகளையில் ஈடுபட்ட 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். வழியில் அந்த நபர்களில் ஒருவர் திடீரென போலீஸ் ஏட்டு பழனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளிவிட்டார். அவரிடம் இருந்து வாக்கி–டாக்கியை பறித்து கொண்டு தப்பி சென்றார். இருவரையும் போலீஸ் ஏட்டு துரத்தியும் இருளில் ஓடி தப்பிவிட்டனர்.
காட்டு பகுதியில் வாக்கி–டாக்கி மீட்பு
இது தொடர்பாக அவர் கொடுத்த தகவலின் பேரில், தூத்துக்குடி நகர் பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இரவு விடிய விடிய போலீசார் அந்த 2 பேரையும் தேடிவந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், தாளமுத்துநகர் காட்டு பகுதியில் வாக்கி–டாக்கி அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றினர். அந்த 2 பேரும் காட்டு பகுதியில் வாக்கி–டாக்கியை வீசியிருந்தது தெரிய வந்தது.
தொழிலாளி கைது
அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். அப்போது, போலீஸ் ஏட்டுவிடம் வாக்கி–டாக்கியை பறித்துச் சென்றவர் தாளமுத்துநகர் ஜான்சேவியர் நகரை சேர்ந்த குருபாதம் மகன் அந்தோணி ராயப்பன் (வயது 31) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் வாக்கி– டாக்கியை காட்டு பகுதியில் வீசி சென்ற கோவில்பிள்ளை விளையை சேர்ந்த சேகர்(42) என்பவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story