சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூத்ரா தரிசன விழாவையொட்டி 11–ந்தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூத்ரா தரிசன விழாவையொட்டி 11–ந்தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Dec 2016 4:15 AM IST (Updated: 27 Dec 2016 9:30 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூத்ரா தரிசன விழாவையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு வருகிற 11–ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராஜேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– உள்ள

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆரூத்ரா தரிசன விழாவையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு வருகிற 11–ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளதாக கலெக்டர் ராஜேஷ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

உள்ளூர் விடுமுறை

சிதம்பரம் நடராஜர்கோவிலில் ஆரூத்ரா தரிசன பெருவிழா அடுத்த மாதம்(ஜனவரி) 11–ந்தேதி நடைபெற உள்ளதால், அன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 21–ந்தேதி அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் வருகிற 11–ந்தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்த பட்சபணியாளர்களோடு செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கலெக்டர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story