திருப்பரங்குன்றம், அவனியாபுரம் போலீசார் பணிச்சுமையில் தவிப்பு காவலர்கள் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கம்
திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், உத்தங்குடி போலீசார் பணிச்சுமையால் பாதித்து வருகின்றனர். காவலர்கள் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைவதை தடுக்க கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ப
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், உத்தங்குடி போலீசார் பணிச்சுமையால் பாதித்து வருகின்றனர். காவலர்கள் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைவதை தடுக்க கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெயரளவுக்கு மாற்றம்மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், உத்தங்குடி போலீஸ் நிலையங்கள் கடந்த 2005–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் கட்டுபாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இந்த போலீஸ் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுக்கு என்று தனித்தனியாக இன்ஸ்பெக்டர்கள், கூடுதலாக சப்–இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள், போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லாமல், இந்த போலீஸ்நிலையங்கள் பெயரளவில் மாநகர் கட்டுப்பாட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருநகர் போலீஸ் நிலையத்திற்கு குறைந்த பட்சமாக 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்–இன்ஸ்பெக்டர்கள், 8 சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் 32 போலீசார் இருக்க வேண்டும்.
பற்றாக்குறைஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் 2 சப்–இன்ஸ்பெக்டகள், 4 சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள், 8 போலீசார் மட்டுமே உள்ளனர். இவர்கள் நாள்தோறும் மதுரையில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்குமான உரிய பணிகளை செய்ய வேண்டும். மேலும் பாதுகாப்பு பணிகள், போலீஸ் நிலைய பணிகள், ரோந்து பணிகளிலும் ஈடுபடவேண்டும். ஆனால் காவலர்கள் பற்றாக்குறையால் ஒரு மணி நேரம் கூட ஓய்வு எடுக்க முடியாமல், பணிச்சுமையால் போலீசார் தவிக்கின்றனர்.
குற்றப்பிரிவுக்கு என்று போலீசார் இல்லாததால் குற்றப்பிரிவு தற்போது குறட்டை விட்டு வருகிறது. இதனால் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலையில் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
இதே நிலைமை தான் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், உத்தங்குடி போலீஸ் நிலையங்களிலும் உள்ளன. காவலர்கள் பற்றாக்குறை நிலவுவதால் பணிச்சுமையில் போலீசார் பெரும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் வழக்குகளும் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், கூடுதலாக காவலர்களை நியமிப்பதோடு, வழக்குகள் தேங்குவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.