ஊமச்சிக்குளம்–கடச்சனேந்தல் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
மதுரை ஊமச்சிக்குளத்தில் இருந்து கடச்சனேந்தல் செல்லும் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுபானக்கடையின் அருகே அரசு பள்ளி, கிறிஸ்தவ ஆலயம் ஆகியவை உள்ளன. எனவே, இந்த மதுபானக்கடையை அகற்றக்கோரி மதுரை கிழக்கு த
மதுரை,
மதுரை ஊமச்சிக்குளத்தில் இருந்து கடச்சனேந்தல் செல்லும் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுபானக்கடையின் அருகே அரசு பள்ளி, கிறிஸ்தவ ஆலயம் ஆகியவை உள்ளன. எனவே, இந்த மதுபானக்கடையை அகற்றக்கோரி மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் மற்றும் ஆலாத்தூர், ஊமச்சிக்குளம், செட்டிக்குளம், வடக்கு மீனாட்சி நகர், தெற்கு மீனாட்சி நகர், இ.பி., பி.எஸ்.என்.எல். நகர், என்.எம்.எஸ்.நகர், ஆர்.வி.கார்டன், பாரத்நகர், கே.பி.கார்டன், கற்பகவிநாயகர்நகர் ஆகிய பகுதிகளின் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் முருகன், பழனிச்சாமி, ராமானுஜம், சுப்பையா, கோபால், முத்துராயர், கந்தப்பன் உள்பட அந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் வீரராகராவை சந்தித்து மனு கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மதுபானக்கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.