பரமத்தி ஒன்றியத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


பரமத்தி ஒன்றியத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Dec 2016 4:30 AM IST (Updated: 27 Dec 2016 9:52 PM IST)
t-max-icont-min-icon

பரமத்தி ஒன்றியத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீரணம்பாளையம் ஊராட்சி நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பரமத்தி ஒன்றியம் வீரணம்பாளையம் ஊராட்சியி

பரமத்தி வேலூர்,

பரமத்தி ஒன்றியத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வீரணம்பாளையம் ஊராட்சி

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பரமத்தி ஒன்றியம் வீரணம்பாளையம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடப்பணி, மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் பணி, பிள்ளைக்களத்தூர் ஊராட்சியில் ஆதி திராவிடர் காலனியில் 14–வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

மேட்டுப்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.4½ லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆடு கொட்டகைகளையும், பில்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சமுதாயகூடம் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.

குன்னமலை ஊராட்சி

பின்னர் குன்னமலை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிப்பணியையும், சித்தம்பூண்டி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டு பணிகளையும், செருகலை ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பரமத்தி ஒன்றியத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, பரமத்தி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சேகர், சாந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story