குடியாத்தத்தில் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
குடியாத்தம் கொசஅண்ணாமலை தெருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் மூங்கப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 100 நாள் பயனாளிகளின் கூலி பணம், முதியோர் ஓய்வூதியம், கியாஸ் மானியம் உள்ளிட்ட பணத்தை வங்கியில் முடக்கி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை மாற்றக் க
குடியாத்தம்,
குடியாத்தம் கொசஅண்ணாமலை தெருவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் மூங்கப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 100 நாள் பயனாளிகளின் கூலி பணம், முதியோர் ஓய்வூதியம், கியாஸ் மானியம் உள்ளிட்ட பணத்தை வங்கியில் முடக்கி உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை மாற்றக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க தாலுகா தலைவர் குமாரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜெயந்தி, மனோர்மணி, ரமணி, நீலாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா பொருளாளர் திலகவதி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாநில செயலாளர் எஸ்.டி.சங்கரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், விவசாய சங்க செயலாளர் குணசேகரன், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் காத்தவராயன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.