வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் வெள்ளி பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கீழ்வேளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். சிங்கப்பூருக்கு சென்றார் கீழ்வேளூர் அருகே உள்ள வலிவலம் கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் கார்மேகம் (வயது62). இவருடைய மனைவி நாகவள்ளி.
கீழ்வேளூர்,
கீழ்வேளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிங்கப்பூருக்கு சென்றார்கீழ்வேளூர் அருகே உள்ள வலிவலம் கடைத்தெரு பகுதியை சேர்ந்தவர் கார்மேகம் (வயது62). இவருடைய மனைவி நாகவள்ளி. இவர்களது உறவினர்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அடிக்கடி குடும்பத்துடன் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று உறவினர்களை சந்தித்து வருவது வழக்கம். கார்மேகம் தனது குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 4 பீரோக்களும் உடைக்கப்பட்டிருந்தன. மேலும், வீட்டின் மற்றொரு அறையில் இருந்த வெள்ளி பொருட்கள் திருட்டு போயிருந்தது.
வழக்குப்பதிவுஇது குறித்து கார்மேகம் வலிவலம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கார்மேகம் வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்குகள், சந்தனப்பேழை, வெள்ளி தம்ளர்கள் உள்ளிட்ட சுமார் 500 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டுப்போன வெள்ளி பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.