வானூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வானூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நகை திருட்டு வானூர் அருகே உள்ள கரசானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 30), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை
விழுப்புரம்,
வானூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை திருட்டுவானூர் அருகே உள்ள கரசானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 30), கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு அரிக்குப்பத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் மாலை ராஜா தனது வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சுபின்னர் இதுகுறித்து வானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜாவின் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து 10 பவுன் நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். திருடுப்போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.