நான்சச் கிராமத்தில் கரடி நடமாட்டம் கேமரா பொருத்தி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
நான்சச் கிராமத்தில் கரடி நடமாட்டம் உள்ளதால் கேமரா பொருத்தி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நான்சச் கிராமம் கொலக்கம்பை அருகே உள்ள நான்சச் கிராமத்தை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. வனப்பகுதியில் காட்
கொலக்கம்பை,
நான்சச் கிராமத்தில் கரடி நடமாட்டம் உள்ளதால் கேமரா பொருத்தி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
நான்சச் கிராமம்கொலக்கம்பை அருகே உள்ள நான்சச் கிராமத்தை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளன. வனப்பகுதியில் காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்புகள், விவசாய நிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இதனால் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துடன் உள்ளனர். மேலும், விளை நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள பயிர்களை வனவிலங்குகள் நாசம் செய்வதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
கண்காணிப்பு பணி தீவிரம்இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்சச் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொது மக்களுக்கு வினியோகம் செய்ய அரிசி, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதிகாலையில் ஊருக்குள் புகுந்த கரடி ஒன்று ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று உணவு பொருட்களை எடுத்து தின்றது.
அப்போது எதிர்பாராத விதமாக மூட்டை கரடி மீது விழுந்ததால் வெளியே வரமுடியாமல் சத்தம்போட்டது. சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் தீப்பந்தங்களை கொளுத்தி போராடி கரடியை விரட்டியடித்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற குன்னூர் வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அந்த பகுதியில் தொடர்ந்து கரடி நடமாட்டம் உள்ளது. எனவே இதை கண்காணித்து கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து குன்னூர் வனத்துறை சார்பில் நான்சச் ரேஷன் கடை வளாகத்தை சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், கரடி மற்றும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், வனத்துறை ஊழியர்கள் அந்த பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.