காரில் கொண்டு சென்ற ரூ.36 லட்சம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் 4 பேரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை


காரில் கொண்டு சென்ற ரூ.36 லட்சம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் 4 பேரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 28 Dec 2016 4:00 AM IST (Updated: 28 Dec 2016 1:21 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.36 லட்சம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரூ.36 லட்சத்து 10 ஆயிரம் திருப்பூர் மாவட்டம் அவினாசி துணை போலீஸ் ச

அவினாசி,

திருப்பூர் அருகே காரில் கொண்டு சென்ற ரூ.36 லட்சம் புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூ.36 லட்சத்து 10 ஆயிரம்

திருப்பூர் மாவட்டம் அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி தலைமையில் பெருமாநல்லூர் போலீசார் கணக்கம்பாளையம் பிரிவு பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவையில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த காரில் இருந்த துணிப்பையில் ரூ.36 லட்சத்துக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும், ரூ.10 ஆயிரத்துக்கு 100 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களை பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

வருமான வரித்துறையினர் விசாரணை

விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த இரும்பு வியாபாரி துல்புகார் அலி (வயது 39), ஆரூன் ரஜித்(35), தபால்காரர் இளையராஜா(35), குப்புராஜ் (31) என்பது தெரியவந்தது. பணத்திற்கான காரணத்தை அவர்கள் சரிவர தெரிவிக்காததால் கோவை வருமான வரித்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பெருமாநல்லூர் போலீஸ் நிலையம் சென்று 4 பேரிடமும் ரூ.36 லட்சத்து 10 ஆயிரத்துக்கான ஆவணங்களை கேட்டனர். அப்போது, பழைய ரூபாய் நோட்டுகளுக்கு கமிஷன் அடிப்படையில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்துச்சென்றது தெரியவந்தது.

கமிஷன் அடிப்படையில்...

அதாவது ரூ.40 லட்சத்துக்கு பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கிக்கொண்டு தங்களிடம் உள்ள ரூ.36 லட்சம் புதிய நோட்டுகளை கொடுப்பதற்காக பெருமாநல்லூர் வந்துள்ளனர். தங்களுக்கு கிடைக்கும் 10 சதவீதம் கமிஷன் தொகையில் இளையராஜாவுக்கும், குப்புராஜூக்கும் சிறிது கமிஷன் கொடுக்கவும் துல்புகார் அலியும், ஆரூன் ரஜித்தும் ஒத்துக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

ரூ.36 லட்சம் புதிய நோட்டுகளை யாருக்கு கொடுக்க வந்தீர்கள்? அவர் பனியன் தொழில் அதிபரா? என வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story