வனத்துறை அதிகாரிகள் மீதான வழக்கை மீண்டும் விசாரணை செய்யக்கோரி கோர்ட்டில் பழங்குடியின பெண் மனு
பழங்குடியின பெண்களிடம் வனத்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்யாமல், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தமபாளையம் கோர்ட்டில் பழங்குடியின பெண் மனு தாக்கல் செய்தார். வனத்துறையினர் சோதனை தேனி மாவட்டம் கம்பம் அருகேய
உத்தமபாளையம்,
பழங்குடியின பெண்களிடம் வனத்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்யாமல், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தமபாளையம் கோர்ட்டில் பழங்குடியின பெண் மனு தாக்கல் செய்தார்.
வனத்துறையினர் சோதனைதேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி கருப்பசாமி கோவில் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 16–ந் தேதி மூலிகைப்பொருட்களை சேகரித்து வந்த கடமலைக்குண்டு பகுதியில் வசிக்கும் பழங்குடியினத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன், அவருடைய மனைவி சாந்தி (24) மற்றும் சில பெண்கள் உள்பட 10–க்கும் மேற்பட்டோரை ஜீப்பில் வந்த 5 பேர் கொண்ட வனத்துறையினர் சோதனை செய்ததாகவும், அவர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து பழங்குடியின மக்கள் தேனி கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து ஆர்.டி.ஓ. தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்த மனுவின் பேரில், பாதிக்கப்பட்ட பெண்களிடம் உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தள்ளுபடி செய்ய மனுதாக்கல்இதற்கிடையே பழங்குடியின பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்ட வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று பழங்குடி இன பெண்கள் ராயப்பன்பட்டி போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து கம்பம் வனத்துறை அதிகாரி உள்பட 5 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை தள்ளுபடி செய்வதற்கு உத்தமபாளையம் கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் விசாரணை நடத்தக்கோரி மனுஇது குறித்து தகவலறிந்த பழங்குடியினத்தை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் உத்தமபாளையம் கோர்ட்டிற்கு நேற்று வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சாந்தி என்பவர் சார்பில் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:–
ராயப்பன்பட்டி போலீஸ்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். இதற்கு நான் ஆட்சேபனை தெரிவிக்கிறேன். மேலும் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை செய்யவேண்டும். விசாரணை அறிக்கைகள், சான்றாவணங்கள் உள்ளிட்டவை தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.